Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விரிவாக்கம் என்ற பெயரில் கொள்ளையடிக்கத் திட்டம்! - அ.தி.மு.க அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் மக்கள்

3 கோடி மதிப்பில் 1.85 ஏக்கரில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளைத் தொடங்கி வைத்தார் அரசு கொறடா. "விரிவாக்கம் என்ற பெயரில் அ.தி.மு.க-வினர் கொள்ளையடிப்பதற்காகத்தான் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்கள்" என்று கொந்தளிக்கின்றனர் பொதுமக்கள்.

                         

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி அருகில் பேருந்துநிலையம் அமைந்துள்ளது. இந்தப் பேருந்துநிலையத்தில் இடநெருக்கடியால் போதுமான வசதிகள் இல்லை. இதனால் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தமிழக அரசுப் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்ய 3 கோடி நிதி ஒதுக்கியது. மேலும், பேருந்து நிலையம் அருகிலேயே 1.85 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் பேருந்து விரிவாக்கத்துக்கான கட்டுமானப்பணிகளை அரசின் தலைமை கொறடா ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

                   

’பி’ தரத்தில் அமைக்கப்பட உள்ள பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் நடத்துநர் ஓய்வறைகள், பயணிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வறைகள், கழிவறைகள், கடைகள் என அனைத்து வசதிகளுடன் இப்பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இது பயனுள்ளது என்றாலும் இதிவும் அ.தி.மு.க.வினர் சம்பாதிப்பதற்கான வேலை என்கிறார்கள் பொது மக்கள்.

                    

இது குறித்து ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் கடை வைத்திருக்கும் ஆறுமுகம், ”பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், இந்தப் பேருந்து நிலையத்தில் கடைகள் பெருகியதற்கு யார் காரணம். அ.தி.மு.க.வினர் அதிக பணத்தை வாங்கிக்கொண்டு கடைகளை அமைத்துக்கொள்ள அனுமதித்துள்ளனர். இதனால் பேருந்துகள் நிற்க முடியாத அளவுக்குக் கடைகள் பெருகிவிட்டன.

              

இப்போது பேருந்து நிலையத்துக்கு இடம் போதவில்லை என்று மீண்டும் சம்பாதிப்பதற்காகப் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்கிறார்கள். கடைகள் இல்லாதபோதே பணத்தை வாங்கிக்கொண்டு கடைகள் அமைத்துக்கொடுத்தார்கள். இப்போது என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும். பேருந்து நிலையம் கட்ட போவதில் லட்சக்கணக்கில் கொள்ளையடிப்பது மட்டுமல்லாமல், கடைகள் கட்டி அதிலும் கல்லாக்கட்ட பார்க்கிறார்கள் அ.தி.மு.க-வினர். இதைத் தமிழக அரசு தடுக்க வேண்டும்" என்று முடித்தார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close