Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'24 மணி நேரமும் இரண்டு அகழாய்வு இடங்களும்..!' - எச்சரிக்கும் எழுத்தாளர் சு.வெங்கடேசன்

கீழடி


''இருபத்து நான்கு மணி நேரமும் இரண்டு அகழாய்வுகளும் என்று குஜராத் வாட் நகர், மதுரை கீழடி ஆகிய இடங்களில் தொல்லியல் துறை நடத்திய அகழாய்வுகளில் புதைந்து கிடக்கும் மர்மங்களை வெளியிட்டுள்ளார்'' எழுத்தாளர்  சு.வெங்கடேசன். 

சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் இன்று கூறுகையில், ''குஜராத்திலுள்ள தனது சொந்த ஊரான வாட் நகரில் தொல்லியல் துறை நடத்திக்கொண்டிருக்கிற அகழாய்வுப்பணியை நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். அதன்பின் அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அவர் பேசுகையில், 'வாட்நகரின் பழைய பெயர் ஆனந்தபூர். இங்கு அகழாய்வு செய்ய வேண்டும் என்று நான் கூறினேன். அதை மத்தியத் தொல்லியல் துறையினர் சிறப்பாகச் செய்துள்ளனர். இங்கு 2,500 ஆண்டுகளுக்கு முன்பு பெரியநகரம் இருந்திருக்கிறது. அது அழிந்துவிடாமல் தொடர்ந்து இருந்துள்ளது. இந்நகருக்கு சீனாவிலிருந்து யுவான்சுவாங் வந்துள்ளார். பெருமைகொண்ட இந்நகரைக் கண்டறிந்ததற்காக தொல்லியல் துறைக்கு எனது மனப்பூர்வமான பாராட்டுகள்' என்று கூறியுள்ளார்.

 

கீழடி

வாட் நகர் போலவே 2014-ம் ஆண்டு அகழாய்வு தொடங்கப்பட்ட இடம் கீழடி. முதன்முறையாக சங்ககால நகரம் ஒன்று இங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெருங்கட்டட அமைப்புகளும் தொழிற்கூடங்களும் விரிந்த அளவில் கிடைத்துள்ளன. பல பிராமி எழுத்துகளும் எண்ணிலடங்காத தொல்பொருள்களும் கிடைத்துள்ளன. பிரதமரால் பாராட்டப்பட்ட அதே தொல்லியல் துறை, இப்போது கீழடி அகழாய்வுக்குழியில் மண்ணள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிறது. ஆய்வாளர்களின் கூடாரங்கள் எல்லாம் பிரித்தெடுக்கப்பட்டுவிட்டன. கீழடியின் கதை முடிவுக்கு வருகிறது.


சு.வெங்கடேசன் தனது சொந்த ஊரில் சிறப்பாக ஆய்வு நடத்தியதற்காக மத்திய தொல்லியல் துறையை பிரதமர் பாராட்டலாம். ஆனால், கீழடி அகழாய்வை எல்லாவகையிலும் சீர்குலைத்து இறுதியாக மூடுவிழாவை நடத்தியுள்ள மத்திய தொல்லியல் துறையை நாம் என்ன செய்யலாம்? 

தொலைக்காட்சி ஒன்றில் நான் இப்படிப் பேசியதைக் கேட்ட நண்பர் ஒருவர் கைபேசியில் அழைத்து, “பிரதமரின் மனதுக்கு நெருக்கமான ஒரு துறை இருப்பதிநாண்கு மணி நேரத்தில் இரண்டுமுறை பாராட்டைப் பெறுவது சட்டப்படி குற்றமா?” எனக் கேட்டார். வாட் நகருக்கு யுவான்சுவாங் வந்ததையெல்லாம் தெரிந்துவைத்துள்ள பிரதமருக்குச் சட்டம் தெரியாமலா இருக்கும்?'' என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close