Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கீழடி விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு ஏற்கத்தக்கது அல்ல..! ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்

கோவை காந்திபுரம், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ''கீழடி மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் முடிந்த நிலையில், அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவு பெற்றன என மத்திய அரசு அறிவித்துள்ளது. 


கீழடி அகழ்வாராய்ச்சியைக் கைவிடும் நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல. கீழடி அகழ்வாராய்ச்சி இந்துத்துவாவின் வரலாற்றுப் பார்வைக்கு நேர்மாறாக இருக்கின்றது. பழங்காலத்தில் சாதிகள் இல்லை என்பது கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் வெளிப்பட்டுள்ளது. இந்துத்துவாவின் பார்வைக்கு மாறான தகவல்கள் வெளியாவதன் காராணமாகவே பா.ஜ.க கீழடி அகழ்வாராய்ச்சியைக் கைவிடுகின்றது. அகழ்வாராய்ச்சியை மூடுவது என்ற மோசமான முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மேலும், கோவை மாநகராட்சியில் பொதுமக்களைப் பாதிக்கும் வகையிலான வரி வசூலைக் கைவிட வேண்டும். அதேபோல, கோவையில் லாபகரமாக இயங்கும் மத்திய அரசின் அச்சகம் தொடர்ந்து இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் காரணமாக 85 பேர் வரை உயிரிழந்து இருப்பதோடு, ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் முறையாக இல்லாதது, டெங்கு பரவும் காரணங்களின் ஒன்று. டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கேரளாவைப் போல தமிழகத்திலும் கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close