Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கால்பந்து உலகக்கோப்பையில் இந்தியா முதல் கோல் அடித்தது #BackTheBlue #FIFAU17WC

Chennai: 

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல்முறையாக கோல் அடித்தது இந்திய அணி. 87 ஆண்டுகால உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறையாகப் பங்கேற்ற இந்திய அணி, கொலம்பியா அணியுடனான போட்டியில் தனது முதல் கோலை அடித்தது.
முதல் போட்டியில் அமெரிக்காவுடன் 3-0 எனத் தோற்றிருந்த இந்திய அணி, இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டம் ஆடியது. 16-வது நிமிடத்தில் அபிஜித் அடித்த அற்புதமான ஷாட்டை கொலம்பிய கீப்பர் அபாரமாகத் தடுத்தார். 45-வது நிமிடத்தில் ராகுல் கன்னொலி பிரவீன் அடித்த பந்து க்ராஸ் பாரில் பட்டுத் திரும்பியது. 

உலகக்கோப்பை

இரண்டாம் பாதியில், கொலம்பியா கோலடித்து முன்னிலை பெற்றாலும், இந்திய வீரர்கள் தொடர்ந்து போராடினர். அதன்பலனாகக் கிடைத்த கார்னர் வாய்ப்பில், ஜீக்சன் தவுனாஜம் ஹெட்டர் மூலம் கோல் அடித்து சமநிலை ஏற்படுத்தினார். உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் இந்தியாவின் முதல் கோலாக இது அமைந்தது. அவர் கோல் அடித்ததும் ஒட்டு மொத்த அரங்கமும் ஆர்ப்பரித்தது. ஆனால் கொலம்பியாவின் பென்யுலோசா உடனடியாக பதில் கோல் அடித்து மீண்டும் முன்னிலை ஏற்படுத்தினார். அது இந்த  ஆட்டத்தில் கொலம்பியா அடித்த இரண்டாவது கோல்.கொலம்பியா 2-1 என முன்னிலை பெற்றது. இந்திய அணியின் கோல்கீப்பர் தீரஜ், மற்றும் தடுப்பு ஆட்டக்காரர் போரிஸ் ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். இறுதியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close