Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கள் இறக்க அனுமதி வேண்டும்..! திருப்பூர் விவசாயிகள் கோரிக்கை

Tiruppur: 

திருப்பூர் மாவட்டத்திலுள்ள தென்னந்தோப்புகளிலிருந்து கள் இறக்கிக்கொள்ள அனுமதியளிக்க வேண்டி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் இன்று திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

" ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது தென்னை மரத்திலிருந்து கள் இறக்குவது தொடர்பான கோரிக்கையை பரிசீலனை செய்யப்படும் என்று உறுதியளித்திருந்தார். ஆனால் அதற்குள் எதிர்பாராத நிகழ்வாக அவருடைய மரணம் அமைந்துவிட்டது. எனவே தற்போது மீண்டும் கள் இறக்கும் கோரிக்கையைத் தீவிரமாக முன்னெடுக்க தொடங்கியிருக்கிறோம்.

கள் இறக்கும் விவசாயிகள், தங்களின் தோட்டத்திலிருந்து கள் பானத்தை வெளியே எடுத்து வந்து விற்பனை செய்யமாட்டோம். கள் இறக்கும் விவசாயிகளின் தோட்டத்திலிருந்து பதநீர் மற்றும் நீரா போன்ற பானங்களும் இறக்கப்பட மாட்டாது.
அதிகபட்சம் நாள் ஒன்றுக்கு 30 முதல் 35 லிட்டர் அளவுவரை மட்டுமே கள் இறக்கிக்கொள்வோம். குறிப்பாக தோட்டத்தில் 250 -க்கும் மேற்பட்ட தென்னை மரங்களைக் கொண்ட விவசாயிகள் கள் இறக்குவதை கட்டாயமாக தவிர்த்துவிடுவோம். கள்ளில் எவ்விதமான கலப்படம் செய்வது அல்லது பதநீரைப் புளிக்க வைத்து விற்பனை செய்வது போன்ற செயல்களிலும் ஈடுபட மாட்டோம். எனவே தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், உடனடியாக தென்னந்தோப்புகளிலிருந்து கள் இறக்க அனுமதியளிக்க நடவடிக்கை எடுக்குமாறு" மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உமாவிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close