Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''புதிய ஹஜ் வரைவு விதிகள் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தும்!'' - ராமதாஸ்

ராமதாஸ்

''புதிய ஹஜ் வரைவு விதிகள், எதிர்மறையான பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்தும்'' என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ''இஸ்லாமியர்களின் வாழ்நாள் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹஜ் புனிதப் பயணம் தொடர்பான கொள்கையை மாற்றியமைக்கும்படி, அரசுக்கு வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. அப்பரிந்துரைகளில் சில வரவேற்கத்தக்கவை என்றாலும்கூட, பெரும்பாலானவை புனிதப் பயணத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை. புனிதப் பயணத்துக்கு முட்டுக்கட்டை போடும் நிபந்தனைகள் கண்டிக்கத்தக்கவை. ஹஜ் பயணத்துக்காக சவுதி அரசுடன் பேசி, புதிய கப்பல் போக்குவரத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. அவ்வாறு கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினால்கூட அதற்கான கட்டணம் விமானக் கட்டணத்தைவிட அதிகமாகத்தான் இருக்கும். அதுமட்டுமன்றி, மூன்று மணி நேரத்தில் விமானம்மூலம் செல்லவேண்டிய மக்காவுக்கு, பல நாள்கள் பயணம்செய்வது தேவையற்றது. இதனால், ஹஜ் புனிதப் பயணம் அலைக்கழிப்பு நிறைந்ததாக மாறிவிடும்.

மேலும், 70 வயதுக்கு மேற்பட்ட பயணிகளுக்கான சலுகைகள் ரத்துசெய்யப்பட்டிருப்பதால், அவர்கள் ஹஜ் பயணம் செய்ய முடியாமல் போய்விடும். ஹஜ் பயணத்துக்கான விசாக்கள் குறைக்கப்படுவதும் நல்ல நோக்கம்கொண்ட செயல் அல்ல. அதே நேரத்தில், 45 வயதைக் கடந்த இஸ்லாமியப் பெண்கள், தங்களின் தந்தை, சகோதரன் போன்ற ரத்த உறவுகளுடன் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டு, நான்கு பெண்கள் இணைந்து பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இது பாராட்டத்தக்கது. புதிய ஹஜ் வரைவு விதிகள் எதிர்மறையான பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஹஜ் பயணத்துக்குப் பெண்களை அனுமதிப்பது தவிர்த்து, மீதமுள்ள அனைத்துப் புதிய விதிகளையும் முன்பிருந்த நிலையிலேயே தொடர்ந்து செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என அதில் கூறியுள்ளார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close