Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான இடத்தைப் பார்வையிட்ட அமைச்சர்

சிவகங்கை மாவட்டத்தில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுவதற்கான இடங்களை கதர் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சர்  ஜி.பாஸ்கரன், நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

இந்த ஆய்வின்போது, நூற்றாண்டு விழா நடைபெறுவதற்குத் தேர்வு செய்யப்பட்ட சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இடத்தையும், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தையும் நேரில் ஆய்வுசெய்து, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள், பொதுமக்கள், முக்கியப் பிரமுகர்கள் விழா நடைபெறும் இடத்திற்கு வந்து செல்லும் வழித்தடங்களின் விவரங்களைக் கேட்டறிந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் நோய் தடுப்பு சிறப்புப் பிரிவைப் பார்வையிட்டு, அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் காய்ச்சல் பிரிவுகளையும், மருத்துவ வசதிகளையும் பார்வையிட்டு, மருத்துவர்களிடம் சிகிச்சை அளிக்கப்படும் முறைகளைக் கேட்டறிந்தனர். மேலும், டெங்கு காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் வீண் வதந்திகளையும், புரளிகளையும் நம்ப வேண்டாம் என்றும், மருத்துவர்களின் அறிவுரைகளின்படி சிகிச்சை பெற்று பூரண நலம் பெற வேண்டும் என்றார் அமைச்சர்.

இந்த ஆய்வில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர்  இளங்கோ, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர்  சுந்தரமூர்த்தி, சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close