Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தமிழக மக்கள் நலன்குறித்து கவனிக்காத அரசுதான் தற்போதைய அரசு' - ஹெச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ ஆவேசம் 

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில், கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வசந்தகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "தற்போது மக்களைக் கவனிக்காத ஓர் அரசு நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் எல்லோரும் டெங்கு காய்ச்சலால் தினமும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான மக்கள் இறக்கிறார்கள். அரசு நடவடிக்கை எடுப்பதாகக் கூறுகிறது. ஆனால், அது முழுமையாக நடைபெறவில்லை. ஆனால், அவர்கள் தற்போது விழா எடுத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இது,மக்களைப் பாதுகாக்க வேண்டிய காலம். ஆனால், அவர்கள் நான் பெரியவனா நீ பெரியவனா என்று  ஆயிரக்கணக்கான மக்களைக் கூப்பிட்டு, அதற்காக செலவுசெய்து மாநாடுகளைப் போல நடத்துகிறார்கள்.அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

சிரமத்தில் இருக்கும் மக்களைப் பாதுகாக்கவேண்டிய அரசு, அப்படிச் செய்யவில்லை என்று ஏக்கத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக, அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை அங்கு தங்கவைத்து சிகிச்சையளிக்க வேண்டும். ஆனால், அதற்கு அங்கு இடமில்லை. அதற்கான இடங்களை உருவாக்க வேண்டும். அல்லது தற்காலிகமாக இடங்களை ஒதுக்கி, அங்கு பெட்டை போட்டு குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும். அது அப்படி நடக்கவில்லை. அதை அரசு உடனடியாகச் செய்ய வேண்டும்.

விவசாயப் பெருமக்களுக்கு இன்சூரன்ஸ் பணம் வரவில்லை. தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் போட்டார்கள் சரியான கணக்கில்லை, சரியான பதிலில்லை, அதனால், விவசாயிகள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அரசு குளங்களை ஆழப்படுத்த அனுமதிகொடுத்தது வரவேற்கத்தக்கது . ஆனால், அதே நேரத்தில் குளத்தின் மடைகளை அரசு சரிசெய்தால் அந்தத் திட்டம் முழுமையாக வெற்றியடையும். உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால். டெங்கு காய்ச்சலை ஒழிக்கமுடியவில்லை என்று அனைத்துத் தரப்பினரும் சொல்கின்றனர்.  உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால், இந்த ஆட்சிக்கு இன்னும் கெட்ட பெயர் ஏற்படும்” என்று அவர் தெரிவித்தார் .

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close