Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மிரட்டும் ரயில்வே நிர்வாகம்! கலெக்டரிடம் முறையிட்ட மக்கள்

மானாமதுரையில், பட்டியலினத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள், ரயில்வே நிர்வாகம் மிரட்டுவதாக ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.    

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில்நிலையம் அருகே குடியிருக்கும் 95 குடும்பங்களுக்கு மாற்று இடம் தராமல் அப்புறப்படுத்தக்  கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மானாமதுரை ரயில்நிலையம் அருகே, நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குடியிருந்துவருகிறார்கள். அவர்களுக்கு ரேஷன் கார்டு, மின் இணைப்பு, வீட்டுவரி ரசீது, வாக்காளர் அட்டை, குடிதண்ணீர் வசதி, தெருவிளக்கு வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன. இந்த மக்களுக்கு, மாற்று ஏற்பாடு செய்துதர தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் 2003 ல் போட்ட உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. 18.09.2017 அன்று, ரயில்வே நிர்வாகம் வீடுகளைக் காலிபண்ணச்சொல்லி மிரட்டிவருகிறது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு 03.10.2017 அன்று கடிதம் எழுதியிருக்கிறது. அதில் முறையான நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட நிர்வாகம், தென்னக ரயில்வே அதிகாரிகளுக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலித் விடுதலை இயக்க மாநில இணைப் பொதுச்செயலாளர் கருப்பையா, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டபடி மாற்று ஏற்பாடு செய்துதராமல் காலிபண்ண வலியுறுத்தக்கூடாது. இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கிறேன் என்று ஆட்சியர் உறுதியளித்திருக்கிறார்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close