Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கேளிக்கை வரியால் சினிமாத்துறை பாதிக்கும்'- தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை

காஞ்சிபுரத்தில் நடந்த கட்சி நிர்வாகி இல்லத் திருமணவிழாவில் நேற்று இரவு கலந்துகொண்டார் சரத்குமார். மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்த சரத்குமார், பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளைத் தற்போதைய அமைச்சர்கள் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகம் இருப்பதால், மருத்துவர்கள் விடுப்பு எடுக்காமல் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. எனவே, தமிழக அரசு டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்” என்றார்.

சரத்குமார்

மேலும், “ஜி.எஸ்.டி வரியால் சினிமா பார்க்க வரும் பொதுமக்கள், அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கவேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில், கேளிக்கை வரியை 10 சதவிகிதம் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதனால் டிக்கெட் விலை கடுமையாக உயரும். பொதுமக்களும் திரையரங்கத்துக்கு வர மாட்டார்கள். இது, சினிமாத்துறையை மேலும் பாதிப்படையச்செய்யும். ஆகவே, தமிழக அரசு கருணையோடு கேளிக்கை வரியை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும்” என்றார் சரத்குமார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close