Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துணை முதல்வர் தொகுதியில் தொடரும் டெங்கு பலி! - அச்சத்தில் போடி மக்கள்

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதி போடி. இரண்டு நாள்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான பெரியகுளம் வந்த பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். செயல்வீரர்கள் கூட்டம், கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை என நேரமில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தார்.

இதற்கிடையில், நேற்று நூற்றாண்டுவிழா நடத்தத் தேர்வான மைதானத்தைப் பார்வையிட்டும், அதிகாரிகளுடன் நிகழ்ச்சி ஏற்பாடு குறித்தும் கலந்துரையாடினார். எப்போது தேனி வந்தாலும் பரபரப்பாகத் தனது நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை கிளம்பிவிடுவார். இப்படித் தொடர் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க நேரம் இருக்கும் பன்னீர்செல்வத்துக்கு தனது தொகுதி மக்களைச் சந்திக்கும் எண்ணம் இல்லையா என்று பல தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்தது. இன்று காலை, தனது தொகுதி மக்களைச் சந்தித்து, குறைகளைக் கேட்டறிந்தார். சுகாதாரப் பிரச்னைகளைப் பற்றி கேட்டறிந்தார். குறிப்பாக டெங்கு பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் பேசினார். 

முன்னதாக, போடி சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (26), டெங்கு காய்ச்சல் பாதிப்பால் போடி அரசு மருத்துமனையில் கடந்த சிலநாள்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சைக்குப் பின்னர், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததைத் தொடர்ந்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். இந்தச் சூழலில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர், நிறைமாத கர்ப்பிணி. இதனால், போடி பகுதியில் சோகம் சூழ்ந்தது. 'போடி அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை. ரத்தப் பரிசோதனைக்கு வருபவர்களைக் கண்டபடி பேசுகிறார்கள். குறிப்பாக, காய்ச்சல் இருக்கும் பெண்கள் ரத்தப் பரிசோதனைக்கு வருவதில்லை. முறையாக சிகிச்சை அளிப்பதில்லை. இதுவரை 9 வயது குழந்தை, 12 வயது சிறுவன் உட்பட இரண்டு பேர் பலியான நிலையில்,மூன்றாவதாக ஒரு பெண் பலியாகியிருக்கிறார். 

இந்த அடிப்படைப் பிரச்னைகளை,  பன்னீர்செல்வம் முன்பே அக்கறை செலுத்தி சுகாதாரப் பிரச்னைகளில் கவனம் செலுத்தியிருந்தால், ராஜேஸ்வரி இறந்திருக்க மாட்டார். இப்போது தொகுதி மக்களைச் சந்தித்து என்ன ஆகப்போகிறது' என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். இனியேனும் தொகுதிகுறித்து அக்கறை காட்டுவாரா பன்னீர்செல்வம்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close