Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொடர் போராட்டங்களால் நிலைகுலைந்துபோன அண்ணாமலைப் பல்கலைக்கழகம்!

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்றுவந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் போராட்டம், தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ள நிலையில், ஊழியர்களின் போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது. 

அன்னாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டம்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, செப்டம்பர் மாத ஊதியம் வழங்காததால், நிர்வாகத்தைக் கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இன்று மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஊழியர்களின் போராட்டம்

"பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 10000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் இறுதி வேலை நாளில் ஊதியம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், மாத இறுதி வேலை நாள் முடிந்து 10 நாள்கள் ஆகிவிட்டன. இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை. கேட்டால், நிதி பற்றாக்குறை என்கிறது நிர்வாகம். இதைக் காரணம் காட்டி, ஒவ்வொரு துறையையும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்துடன் இணைத்துவிட்டால், பழைமைவாய்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெறும் கட்டடம் மட்டும்தான் மிஞ்சும். பண்டிகைக் காலங்களில், நிர்வாகம் எங்களை இப்படி வஞ்சிப்பது கண்டனத்துக்குரியது. இது ஒன்றும் புதிதல்ல. அடிக்கடி இப்படிப் போராடித்தான் எங்களின் ஊதியத்தைப் பெறுகிறோம். அரசு உடனடியாகத் தலையிட்டு, இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்" என்கிறார்கள், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close