Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓயாத தண்ணீர்ப் பிரச்னை - பன்னீர்செல்வத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

தனது தொகுதி மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்த பன்னீர்செல்வம், நேராக வைகை அணையிலிருந்து தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு சுத்திகரிக்கப்பட்ட கூட்டுக் குடிநீர்த்திட்டத்தைப் பார்வையிட்டார். சுமார் 68.83 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு, தற்போது 95 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்து, சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. சோதனை ஓட்டத்தை விரைவில் முடித்து திட்டத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் பன்னீர்செல்வம். பின்னர்,  அங்கிருந்து புறப்பட்ட பன்னீர்செல்வத்தைச் சந்திக்க குருவியம்மாள்புரம் கிராம பெண்கள் காலிக் குடங்களுடன் திரண்டுவந்தனர். இந்தக் குடிநீர்த்திட்ட கட்டடத்துக்கு அருகிலுள்ள கிராமம் அது. அவர்கள், காலிக் குடங்களுடன் வருவதைக்கண்ட போலீஸ், அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆவேசமடைந்த பெண்கள்,  'நாங்கள் பன்னீர்செல்வத்தை சந்திக்க உரிமை இல்லையா?' என்று கேள்வி கேட்டனர். அவர்களை அப்புறப்படுத்த போலீஸார் முயற்சி செய்கையில், சிறிது நேரம் சலசலப்பு உருவானது. இதைக்கண்ட பன்னீர்செல்வம், உடனே அங்கே வந்து கிராமப் பெண்களிடம் 'என்ன பிரச்னை?' என்று கேட்டார். 'நாங்கள் பக்கத்திலிருக்கும் குருவியம்மாள்புரம் கிராமம். 150 குடும்பங்கள் வசிக்கிறோம். எங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை.

சாக்கடைத் தண்ணீரைக் குடித்து உயிர்வாழ்கிறோம். அதிகாரிகளைச் சந்தித்து மனுகொடுத்தால், ஒரு நாள் தண்ணீர் வரும். அதுவும் இரண்டு குடம்தான் ஒரு குடும்பத்துக்கு கிடைக்கும்.  அப்புறம் வராது. ஓயாத தண்ணீர்ப் பிரச்னையில நாங்க கஷ்டப்படும்போது, தேனிக்கு கொடுக்கிறது என்ன நியாயம்? எங்களுக்கு தண்ணீர் கொடுங்கள் முதலில்.' என்றனர். 'உடனே நடவடிக்கை எடுக்கிறேன். விரைவில் உங்கள் தண்ணீர்ப் பிரச்னை தீரும்!' என்று உறுதியாகச் சொன்னார் பன்னீர்செல்வம். அருகில் இருந்த மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், 'தடையில்லாமல் உங்கள் கிராமத்துக்கு தினமும் தண்ணீர் வழங்கப்படும்' என்றார். நம்பிக்கையோடு திரும்பிச்சென்றார்கள் பெண்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close