Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசு கொண்டுவர உள்ள மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதாவைக் கைவிடக்கோரி, நெல்லையில் மோட்டார் வாகனத் தொழில் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம்- 2017’ வரும் நவம்பர் மாதத்தில் கூட உள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது. இந்தச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால், பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்பது மோட்டார் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், சொந்த உபயோகத்தில் உள்ள பைக், கார் போன்ற வாகனங்களுக்கு 15 வருடங்களுக்கு ஒருமுறை எஃப்.சி காட்டும் நடைமுறைக்குப் பதிலாக, ஒவ்வொரு வருடமும் காட்டவேண்டிய சூழ்நிலை ஏற்படும். பைக், ஆட்டோ, கார், டெம்போ, மினி லாரி, லாரி உள்ளிட்ட அனைத்தையும் அவரவர் விருப்பப்பட்ட இடத்தில் பழுதுபார்க்க முடியாது. அவற்றுக்கென அரசு நிர்ணயித்த இடங்களில் மட்டுமே பழுதுபார்க்க வேண்டும். அதனால், வாகன உரிமையாளர்களுக்குப் பண விரயம் ஏற்படுவதுடன், பெயின்டர், வெல்டர், மெக்கானிக் உள்ளிட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். 

போராட்டம்

புதிய சட்டத் திருத்தத்தின்படி, மூன்றாம் நபர் நஷ்டஈடு என்பது அதிகபட்சமாக உயிரிழப்புக்கு 5 லட்சம் ரூபாயும் காயத்துக்கு 2.5 லட்சமும் மட்டுமே வழங்கப்படும். ஒருவேளை இழப்பீடாக 20 லட்சம் வழங்க தீர்ப்பு வந்தால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 5 லட்சம் மட்டுமே வழங்கும். மீதித் தொகையை வாகன உரிமையாளரே கொடுக்க வேண்டும். அத்துடன், கூட்டுத் தொழில் முறையில் மட்டுமே வாடகை கார்கள் செயல்பட முடியும் என்பதால், ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களே செயல்பட முடியும். தற்போதுள்ள ஆட்டோ, டாக்ஸி தொழில் முடங்கிவிடும் ஆபத்து உள்ளது.

ஓட்டுநர் உரிமம் வழங்குவதும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். அந்த நிறுவனங்களே ஓட்டுநர் பயிற்சியை அளிக்கும். அதனால், இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இந்தச் சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட்டால், கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்பதால், நெல்லையில் ஓட்டுநர்கள், கார், மினி லாரி உரிமையாளர்கள், பயிற்சிப்பள்ளி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பங்கேற்றவர்கள், சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close