Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமித் ஷாவுக்கு எதிராகக் கொந்தளித்த காங்கிரஸார்!

காங்கிரஸ், அமித்ஷா

பா.ஜ.க கட்சியின் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா நிறுவனத்தில் நடந்த முறைகேட்டை, ஆங்கில இணையதளம் ஒன்று வெளியிட்டது. அதில், மோடி பிரதமராகப் பதவியேற்றபின், 50 ஆயிரம் லாபத்தில் இயங்கிய ஜெய் ஷாவின் டெம்பிள் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் லாபம், 80 கோடி அளவில் உயர்ந்துள்ளது. 16 ஆயிரம் மடங்கு லாபம் ஈட்டியதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் மத்திய அரசின் டிமானிட்டைசேஷன் நடவடிக்கையால், இந்தியப் பொருளாதார வளர்ச்சி சரிந்தது. ஜெய் ஷாவின் நிறுவனம் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அந்த இணையதளத்தில் செய்தி வெளியானது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அமித் ஷாவின் மகன் மட்டும் லாபம் அடைந்ததாக ராகுல்காந்தி ட்வீட் செய்திருந்தார்.

செய்தி வெளிட்ட ஆங்கில இணையதளத்தின்மீது ஜெய்ஷா 100 கோடி மானநஷ்டம் கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார். பா.ஜ.க தேசியத் தலைவர் பதவியிலிருந்து அமித் ஷாவை நீக்கவேண்டியும், மகன் ஜெய் ஷா மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடந்துவருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் பகுதியில், வடக்கு மாவட்டச் செயலாளர் ரூபி மனோகரன் தலைமையிலும், செங்கல்பட்டில் தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தரராஜன் தலைமையிலும், காஞ்சிபுரத்தில் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close