Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை அரசு மருத்துவமனையில் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் அனுமதி!

Chennai: 

பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குயில்தாசன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சுமார் 26 ஆண்டுகள் சிறையிலிருந்து வந்தார். இந்த நிலையில், தந்தை உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், இதனால் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்குக் கோரிக்கை மனு அளித்தார். அவரது கோரிக்கையைப் பரிசீலனை செய்த தமிழக அரசு, நிபந்தனையுடன் பேரறிவாளனை ஒரு மாத பரோலில் விடுவித்தது. இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரை, தாயார் அற்புதம்மாள் கண்ணீர்மல்க வரவேற்றார்.

இதனிடையே, தந்தை குயில்தாசனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், பரோலை நீட்டிக்கக்கோரி தமிழக அரசுக்கு பேரறிவாளன் கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கியது. இதையடுத்து, உடல்நலக் குறைவால் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்

சீறுநீரகம், ஆஸ்துமா, நரம்புகள் உள்ளிட்ட பிரச்னைகளால் குயில்தாசன் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அளவுக்கு அவரது உடல்நிலை இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close