Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புலிக்குளம் மாடுகள் ஆராய்ச்சி மையத்தை மாற்ற வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை

குப்பைகள் கொட்டும் இடத்தையும் புலிக்குளம் மாடுகள் ஆராய்ச்சி மையத்துக்கான இடத்தையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று மாங்குளம் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.

மக்கள் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா மாங்குளம் கிராமத்தின் அருகே, மானாமதுரை பேரூராட்சி நிர்வாகம் மக்கும் குப்பை மக்காத குப்பைகள் பிரித்தெடுக்கும் இடமாக பயன்படுத்துவோம் என்று கூறி, திறந்த வெளியில் குப்பைகளையும் கழிவுகளையும் இறந்துபோன நாய் கோழி என ஒரே இடத்தில் கொண்டுவந்து கொட்டுகிறார்கள். இதனால் எங்கள் கிராம மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் கால்நடைகளும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேய்ச்சல் நிலம் பாதிக்கும் வகையில் புலிக்குளம் மாடுகள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும். குப்பையில் உள்ள பிளாஸ்டிக் பைகள் காற்றில் பறந்து வருவதால் அதைச் சாப்பிட்டு மாடுகள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

மேலும், அந்தக் குப்பைக் கிடங்குகளில் மழைபெய்யும் நேரத்தில் அதன் அசுத்தமும் போர்வெல் கிணற்றில் கலப்பதால் குடிதண்ணீர் நிறமும் தன்மையும் மாறிவிட்டது. இதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளோம். இந்த அசுத்தமான தண்ணீர் கால்வாய்களில் கலப்பதால் விவசாயமும் கெட்டுபோய்விட்டது. மேலும், புலிக்குளம் மாடுகள் ஆராய்ச்சி நிலையத்தையும் குப்பைக்கிடங்கையும் வேறு இடத்துக்கு மாற்றி அமைக்க வேண்டும் என்று புகார் அளித்திருக்கிறோம் என்கிறார்கள் மாங்குளம் கிராம மக்கள்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசும்போது… அரசாங்கத்துக்குச் சொந்தமாக 220 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலங்களையெல்லாம் ஒரு சிலர் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிப்பு செய்துவைத்திருக்கிறார்கள். மேய்ச்சலுக்கு இடம் இல்லாமல் அவதிப்படுவோம் என்று சொல்வது பொய். தாராளமாக மேய்ச்சல் நிலம் இருக்கிறது என்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close