Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’’டெங்கு ஒழிப்பில் தமிழக அரசின் நடவடிக்கை போதாது’’ – குற்றம்சாட்டுகிறார் தமிழிசை

’'டெங்கு ஒழிப்பில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் போதாது. டெங்கு பாதிப்பு அதிகமானதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததும் ஒரு காரணம்’ என தூத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

tamilisai

திருநெல்வேலியில் நடைபெறும் பா.ஜ.க கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த தமிழிசை, செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தமிழகத்தில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களில் பிற கட்சியிலிருந்து தொண்டர்கள், நிர்வாகிகள் பா.ஜ.க-வில் இணைந்து வருகின்றனர். வாக்குச்சாவடி வரை பா.ஜ.க-வின் பலம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்றைய சூழ்நிலையில் ஒரு மாற்றம் தேவை. இந்த மாற்றத்தை பா.ஜ.க.வால் மட்டுமே தர முடியும். எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க. ஒரு நாளும் மாற்றுக்கட்சியாக வரவே முடியாது.

கெயில் திட்டத்தை முதலில் பரிசோதனை அடிப்படையில் தமிழகத்தில் செயல்பட அனுமதி அளித்ததே தி.மு.க.தான். அதன்பின்பு இத்திட்டத்தை தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்த கையெழுத்திட்டது அ.தி.மு.க. கையெழுத்து போடும்போது கூட, அந்த நேரத்தில் தி.மு.க மத்திய ஆட்சியில் பங்கில் இருந்தது. அப்பொழுதெல்லாம் எந்தக் கருத்தும் சொல்லாமல் தற்போது மட்டும் ஏன் கருத்துச் சொல்ல வேண்டும்? கீழடி அகழ்வாராய்ச்சி மோசமான அரசியல் உள்நோக்கத்தோடு விமர்சிக்கப்படுகிறது. கீழடியில் இன்று தொன்மையான தமிழக நாகரிகத்தை வெளிக்கொணர்வதில் பா.ஜ.க-வுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால், பா.ஜ.க-வினர் இந்த தொன்மையை வெளிக்கொண்டு வர விருப்பம் இல்லாதவர்கள் என மற்ற கட்சியினர் பேசி வருகிறார்கள்.  பா.ஜ.க தமிழகத்தில் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதை மற்றவர்களால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.

டெங்குவுக்காக தமிழக அரசு, மத்திய அரசிடம் எவ்வித உதவியையும் கேட்கவில்லை என மத்திய சுகாதாராத்துறை கூறியிருப்பது உண்மைதான். முறையான அணுகுமுறையின்படி கோரிக்கை வைத்தால்தானே மத்திய அரசு உதவி செய்யும். முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சையை இணைக்க கோரிக்கை வைத்து, இணைப்புக்கு காரணமாக செயல்பட்டதே பா.ஜ.க.தான். டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் தமிழக அரசின் செயல்பாடு போதாது. இதில் சமூக அமைப்புகள், தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வருவதற்கு தமிழகத்தில் எங்குமே உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததும் ஒரு காரணம். தற்போதைய அ.தி.மு.க-வில் உட்கட்சி பிரச்னை அதிகம் உள்ளது. ஒவ்வொரு அமைச்சர்களும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லி வருகிறார்கள். அவர்களது கட்சிப் பிரச்னையால் அரசின் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. கட்சிப் பிரச்னைகளை மறந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும்’’ என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close