Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு லட்சம் பேர் பார்வையிட்ட நாகர்கோவில் இஸ்ரோ கண்காட்சி

நாகர்கோவில் இந்து கல்லூரியில் நடைபெற்ற விண்வெளிக் கண்காட்சியில், இஸ்ரோவின் சாதனைகளை விளக்கும் படைப்புகளை ஒரு லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், அக்டோபர் 4 முதல் 10 வரை உலக விண்வெளி வாரமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.

இதை முன்னிட்டு, உலக விண்வெளி வார விழா மற்றும் விண்வெளிக் கண்காட்சி, நாகர்கோவிலில் உள்ள இந்து கல்லூரியில் கடந்த 5 -ம் தேதி துவங்கியது. இந்த விண்வெளிக் கண்காட்சியில், செயற்கைக்கோள்களை அனுப்பிய விண்கலம், கிரையோஜெனிக் இன்ஜின், டெலிமொடிசன் குறித்த செயல்பாடுகள் கண்காட்சியில் காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. இஸ்ரோ சார்பில் விண்ணில் ஏவப்பட்ட எந்தெந்த செயற்கைக்கோள் எவ்வாறு பொதுமக்களுக்குப் பயன்படுகிறது என்பதுகுறித்து கண்காட்சியில் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், கண்காட்சியில் செயற்கைக்கோளின் ஒவ்வொருகட்டமும் அதன் செயல்பாடுகள், அவை எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பது குறித்த வீடியோ காட்சிகள் மற்றும் ஒருசில செயல் முறைகள் மூலம் கண்காட்சியைப் பார்வையிட வரும் மாணவ, மாணவியர்களுக்கு இஸ்ரோ ஊழியர்களால் விளக்கப்படுகிறது. ராக்கெட்  பொருத்துதல், இயக்குதல் போன்றவையும்  மகேந்திரகிரியில் நடக்கும் பணிகள் பற்றியும் காட்சிகளாக விளக்கப்பட்டன.

இந்தக் கண்காட்சியை ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பார்வையிட்டதோடு, விண்வெளிகுறித்த குறிப்புகளையும் எடுத்துச்சென்றனர். 8-ம் தேதி வரை 70 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். தொடர்ந்து பார்வையாளர்களின் கூட்டம் அதிகரித்ததால், மேலும் ஒருநாள் காண்காட்சி நீட்டிக்கப்பட்டது. அதன்படி, ஞாயிறு இரவு வரை சுமார் ஒரு லட்சம் பேர் இஸ்ரோ கண்காட்சியைப்  பார்வையிட்டுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close