Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''டெங்குவைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளது!'' - அன்புமணி ராமதாஸ் 

அன்புமணி ராமதாஸ்

''டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளது'' என பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகர் பஸ் நிலையம் அருகே, பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் நிலவேம்புக்  கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று  நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ், நிலவேம்புக் கஷாயத்தைப் பொதுமக்களுக்கு வழங்கிப் பேசினார். ''டெங்கு காய்ச்சல்குறித்து விழிப்பு உணர்வுகளை மக்களிடம் கொண்டுசெல்ல இந்த அரசு தவறிவிட்டது. அதுமட்டுமல்லாமல், அரசு மருத்துவமனைகளில் யாராவது மர்மக் காய்ச்சல் என்று வந்தால், அவர்களுக்குப் பரிசோதனை செய்யவேண்டாம் என்று கூறியுள்ளனர். பலி எண்ணிக்கை உயர்ந்தால் அவப்பெயர் வந்துவிடும் என்பதால், இப்படிச் செய்கிறார்கள். இது, மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரானது. பிரச்னை இருந்தால் அதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு தீர்வு காண வேண்டும். ஆனால் இந்த அரசு, உண்மைகளை மூடி மறைக்கிறது. இதில், எந்தப் பிரயோஜனமும் இல்லை. டெங்கு நோய்குறித்து பா.ம.க சார்பில் தொடர்ந்து விழிப்புஉணர்வு மேற்கொண்டு வருகிறோம். அரசு செய்யவேண்டியதை நாங்கள் செய்துவருகிறோம். தமிழகத்தில் 11 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே டெங்குக் காய்ச்சல் பாதிப்பு இருந்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகிறார். ஆனால், 30 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையெல்லாம் சுகாதாரத் துறை மறைக்கிறது. டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் இந்த அரசு தோல்வியடைந்துள்ளது'' என்றார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close