Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இங்கு படம், வீடியோ எடுக்கக்கூடாது'- பத்திரிகையாளர்களை அதிரவைத்த அரசு மருத்துவமனை

கடலூர் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கத் தடை விதித்து ஒட்டியுள்ள போஸ்டரால், பொதுமக்களும் பத்திரிகையாளர்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடலூர் அரசு மருத்துவமனை


கடலூர் மாவட்டத்தில், நூற்றுக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அதில் பலர் இறந்துள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கவும், மேலும் டெங்கு பரவாமலிருக்கவும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதில், பலர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றனர். மேலும், டெங்கு நோய் குறித்த 'டெங்கு எலிஸா' பரிசோதனைக்கான வசதியும் இந்த மருத்துவமனையில் மட்டுமே உள்ளது. இந்நிலையில்,  "இந்த மருத்துவமனையில், இணை இயக்குநர் அனுமதி இன்றி புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுக்கக்கூடாது. பத்திரிகையாளர்களுக்கு பேட்டிகொடுக்கும் அதிகாரம் இணை இயக்குநருக்கு மட்டுமே உள்ளது" என்று மருத்துவமனை நிர்வாகத்தால், மருத்துவமனை வளாகத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களும் பத்திரிகையாளர்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 

போஸ்ட்டர்
     

"டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு, மர்மக் காய்ச்சலால் இறந்துபோனார்கள் என்றுதான் சான்றே கொடுக்கின்றனர். தரம் உயர்த்தப்பட்ட இந்த மருத்துவமனையில், டெங்குக்கான மருத்துவமே சரிவரவில்லை. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை  வெளியில் சொன்னால் ஆட்சிக்கு அவப்பெயர் வந்துவிடுமாம். அதனால், மூடிமறைக்க நினைக்கிறது மருத்துவமனை நிர்வாகம். அதோடு, நல்ல கழிப்பிட வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், படுக்கை வசதி என்று அடிப்படை வசதிகளே கிடையாது. எதற்கெடுத்தாலும் காசு பிடுங்குகிறார்கள். பத்திரிகையாளர்கள் உள்ளே வந்தால், மருத்துவனையின் முகத்திரை கிழிந்துவிடும் என்பதற்காக இப்படிச் செய்கிறார்கள்" என்கிறார்கள் மருத்துவமனை ஊழியர்கள் சிலர்.
                             

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close