Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிராஃபிக் ராமசாமி வழக்கில் சேலம் கலெக்டர் ரோகிணிக்கு நோட்டீஸ்!

சேலத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் விதிகளைமீறி டிஜிட்டல் பேனர் வைத்த வழக்கில் பதிலளிக்க கலெக்டர் ரோகிணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தங்கள் தொகுதிக்குட்ட இடங்களில் நடைபெறும் நூற்றாண்டு விழாவில் டிஜிட்டல் பேனர்களை வைத்து அமர்க்களப்படுத்தி வருகின்றனர் அமைச்சர்கள். போக்குவரத்துக்கு இடையூறாகச் சாலைகளின் இருபுறங்களிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பேரில் ஆளும்கட்சியினர் விதிகளை மீறி சாலையோரங்களில் பேனர்களை வைத்துள்ளதாக டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், "சேலத்தில் செப்டம்பர் 20-ம் தேதி நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் விதிகளைமீறி 200 பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சட்டவிரோத பேனர்களை முதல்வர், அமைச்சர்களே ஊக்குவிப்பதாகக் கூறியிருந்தார். 

இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close