Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கந்தசஷ்டி திருவிழா: தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் 25-ம்தேதி உள்ளூர் விடுமுறை

trichendur

திருச்செந்தூரில் நடைபெற உள்ள கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, வரும் 25-ம் தேதி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், வரும் 20-ம் தேதி வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா துவங்குகிறது.  6-ம் நாளான வரும் 25-ம் தேதி மாலை 4.30 மணிக்கு, கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. சூரசம்ஹாரத்தைக் காண தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்கள் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் திருச்செந்தூரில் கூடுவார்கள். இதற்காக, தமிழகம் முழுவதிலுமிருந்து 550 சிறப்புப் பேருந்துகளும் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கும் 25-ம் தேதி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், அரசுத் தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியருக்கும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தாது. மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும் சார்புக் கருவூலங்களும், குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த விடுமுறைக்குப் பதிலாக, நவம்பர் 11-ம் தேதி வேலைநாளாகக் கருதப்படும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close