Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிலைகடத்தலில் சிக்கிய பொறியாளர்கள்! - பொன்மாணிக்கவேல் அதிரடி

காஞ்சிபுரம் அருகே காரில் கடத்த முயன்ற பழைமையான ஐம்பொன் சிலை ஒன்றை, நேற்றிரவு சிலைகடத்தல் தடுப்புப் பிரிவினர் மீட்டனர். இதுதொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பொறுப்பேற்றுக்கொண்டதும் அதிரடியான நடவடிக்கைகள் மேற்கொண்டுவந்தார். கடந்த வருடம் தீனதயாளன் மற்றும் அவரது கூட்டாளி லட்சுமிநாரயணன் ஆகியோரிடமிருந்து பல கோடி மதிப்பிலான சிலைகளை மீட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரயில்வே பாதுகாப்புத்துறை ஐஜி-யாக பொன்மாணிக்கவேல் மாற்றப்பட்டார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் சிலைகடத்தல் வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் காஞ்சிபுரம் அருகே காரில் கடத்தப்பட்ட சிலை மீட்கப்பட்டுள்ளது.

சிலைகடத்தல்

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பாலுசெட்டிசத்திரம் அருகே இரவு ஒரு மணிக்கு வந்த ஒரு காரிலிருந்து மற்றொரு காருக்கு ஐம்பொன் சிலை மாற்றப்பட்டது. அப்போது 2.35 கோடி பணமும் கைமாறியது. இது தொடர்பாக ஏற்கெனவே சிலைகடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்குத் தகவல் வந்திருந்தது. இதனால் பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் அவர்களைப் பின்தொடர்ந்துவந்து பிடித்தனர். கார்த்திக், தட்சிணாமூர்த்தி இரண்டு பொறியாளர்களோடு மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரதாப் என்பவரிடம் சிலையை விற்க வந்ததாகக் கூறியிருக்கிறார்கள். பிரதாப் மற்றும் அவரின் கூட்டாளி ஒருவரும் காவல்துறையினர் வருவதைக் கண்டு தப்பியோடிவிட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலையுடன் கைதுசெய்யப்பட்ட நான்கு பேரையும் சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கும்பகோணம்  நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close