Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெடிக்கும் செவிலியர்கள் போராட்டம்! - தமிழகத்தில் மருத்துவ சேவை முடங்கும் அபாயம்?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியர்கள், சம்பள உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் பரவும் அபாயம் இருப்பதால், தமிழகத்தில் மருத்துவ சேவை பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.

செவிலியர்கள்

“2016 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, செவிலியருக்கு மாதச் சம்பளமாக 34 ஆயிரம் கொடுக்க வேண்டும். ஆனால், அது இன்னும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. வெறும் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் வாங்குகிறோம். மருத்துவர்களுக்கு அடுத்து உயிர்காக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுவருகிறோம். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களிடமிருந்து அதிகக் கட்டணம் வசூல் செய்கின்றனர். ஆனால், எங்களுக்குப் போதிய அளவில் சம்பளமோ மற்ற சலுகைகளோ அளிக்கப்படுவதில்லை.“ எனப் போராட்டம் நடத்தும் செவிலியர்கள் தெரிவிக்கிறார்கள்.

இன்று, சென்னை செட்டிநாடு மருத்துவமனையிலுள்ள 200 பெண் செவிலியர்களும், 50 ஆண் செவிலியர்களும் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 50 ஆண் செவிலியர்களும், 250 பெண் செவிலியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தாம்பரம் பாலாஜி மருத்துவமனை ஊழியர்களும் தற்போது போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நிலையில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி, காஞ்சிபுரம் சங்கரா மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட மருத்துவமனைகளிலும் படிப்படியாக போராட்டம் நடத்த ஆயத்தமாகிவருகிறார்கள். விரைவில் தமிழகமெங்கும் போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக செவிலியர்கள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close