Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுச்சேரியில் கிரண்பேடிக்கு எதிராக உண்ணாவிரதம்!

”ஆதிதிராவிட மக்களுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்” என்று வலியுறுத்தி, புதுச்சேரியில் ஆதிதிராவிட அமைப்புகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளன.

பாண்டி

புதுச்சேரியில், ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் அதிகார மோதல் நீடித்து வருகின்றது. அதன் காரணமாக, புதுச்சேரி அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கிப்போயிருக்கிறது. இந்நிலையில், புதுச்சேரி ஆதிதிராவிட மாணவர்களின் இலவச கல்வித் திட்ட நிதிக்கு ஒப்புதல் தராதது, ஆதிதிராவிட மக்கள் கல் வீடு கட்டும் திட்டத்துக்கு நிதி அளிக்க அனுமதி மறுப்பு உள்ளிட்ட ஆதிதிராவிட மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கிரண்பேடி தடுத்துவருகிறார் என்றும், பட்டியலின அமைப்புகள் குற்றம் சாட்டின.

பாண்டிச்சேரி
 

அதையடுத்து, தொடர்ந்து அந்த மக்களுக்கு எதிராகச் செயல்படும் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி, அவர்களின் போராட்டக்குழுவைச் சேர்ந்த 300 பேர், புதுச்சேரி தலைமைத் தபால் நிலையம் எதிரில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கின்றனர். அந்தப் போராட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close