Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிளாஸ்டிக் சர்ஜரி அவலம்! - நாடு திரும்ப முடியாத சீனப் பெண்கள்

சீனாவைச் சேர்ந்த பெண்கள்

டகொரியா விமான நிலையத்தில், பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படம் நேரில் வந்த பெண்களுக்கு ஒத்துப்போகவில்லை என்பதால், சீனாவைச் சேர்ந்த மூவரையும் விமான நிலைய அதிகாரிகள் விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை.

'கோல்டன் வீக்' (Golden week) எனப்படும் எட்டு நாள் விடுமுறை, சீனாவில் கொடுக்கப்படும். அந்த விடுமுறை நாள்களைப் பயன்படுத்தி, சீனர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவருகின்றனர். சீனர்கள் பெரும்பாலும், 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்துகொள்ள வடகொரியா நாட்டுக்குச் செல்கின்றனர். இப்படி இருக்கும் நிலையில், சீனாவைச் சேர்ந்த மூன்று பெண்கள் வடகொரியா சென்று 'பிளாஸ்டிக் சர்ஜரி' முடித்துவிட்டு  சீனாவுக்குச் செல்ல விமான நிலையம் வந்துள்ளனர். ஆனால், அங்கு குடியேற்ற அலுவலகத்தில் (Immigration office) இவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அவர்கள், பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருந்ததால், முகம் வீங்கியும் பேன்டேஜ்கள் ஒட்டப்பட்டும் இருந்தன. இதனால், அவர்கள் பாஸ்போர்டில் இருக்கும் புகைப்படத்துக்கும்  நேரில் பார்க்கும் முகங்களுக்கும் வேறுபாடு இருந்ததால், அவர்களை விமானம் ஏற அனுமதிக்கவில்லை. எல்லா சான்றிதழ்களும் இருந்தும், தங்களுடைய நாட்டுக்குச் செல்ல முடியாமல் இருந்தனர். 

அந்த மூன்று பெண்களும் விமான நிலையத்தில் அமர்ந்திருந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அந்தப் புகைப்படம், இதுவரை 50 ஆயிரத்துக்கும் அதிகமாக விரும்பப்பட்டிருக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close