Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெங்கு களப்பணியில் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள்!

டெங்கு அதிகமாக பரவி வருவதால், பல்வேறு அமைப்புகளும் சுகாதாரத்துறையுடன் இணைந்து விழிப்புஉணர்வுப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
மதுரை வேளாண்மை கல்லூரியின் மனையியல் துறை மாணவ மாணவிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களுக்கு நிலவேம்புக் கசாயம் வழங்கி வருகிறார்கள். இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்களுக்கும், அங்கு வரும் பொதுமக்களுக்கும் நிலவேம்புக் கசாயம் தேடிச்சென்று கொடுத்தனர்.

வேளாண்மைகல்லூரி

இதைப்பற்றி நம்மிடம் பேசிய மாணவிகள் ''தோட்டக்கலைத்துறையினர் எங்களுக்கு இதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுத்தனர். எங்கள் பாடத்திட்டத்தில் கிராம தங்குதல் என்ற பயிற்சி உள்ளது. இதன்படி கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வோம், அவர்களிடம் கற்றுக்கொள்வோம். அதையே இந்த வருடம் டெங்கு விழிப்பு உணர்வுக்காக பயன்படுத்திக்கொண்டோம். மேலூர் பகுதி கிராமங்களில் நிலவேம்புக் கசாயம் வழங்கி, டெங்கு விழிப்பு உணர்வை மக்களிடம் எடுத்துக் கூறினோம். இப்போது கலெக்டர் அலுவலகம் வருகிறவர்களுக்கு தேடிச்சென்று நிலவேம்புக் கசாயம் வழங்கி வருகிறோம். இதேபோல அனைத்துக் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் டெங்கு விழிப்பு உணர்வை களத்தில் இறங்கிச் செய்யலாம்'' என்றனர். அரசே அனைத்தையும் செய்யும் என்று அலட்சியமாக இருக்காமல், அனைவரும் டெங்குவை விரட்டும் முயற்சியில் களம் இறங்கினால் சிறப்பாக இருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close