Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வரைச் சந்தித்தது ஏன்? திருமாவளவன் விளக்கம்

Chennai: 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.

சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், 'தமிழ்நாட்டில் உள்ள டெங்கு பாதிப்புகுறித்து முதல்வரிடம் விரிவாகப் பேசினோம். அதற்கு அவர், டெங்கு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார். அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். டெங்குவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை 25 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்பதை மீண்டும் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றோம்.

கெயில் திட்டம் மாற்று வழியில் வர வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியோடு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். அம்பேத்கர் மணிமண்டபத்தைப் பராமரிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளோம். தமிழகம் இதிலும் முன்னோடியாக இருக்க வேண்டும் என்றோம். இதைப் பரிசீலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்' என்று கூறினார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close