Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெங்குவால் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்? தமிழக அரசு புதிய பட்டியல்

டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்து வருகின்றனர். இந்த நோயைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழகத்தில் டெங்குக் காய்ச்சலுக்கு 400 பேர் பலியாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதைத் தமிழக அமைச்சர்கள் மறுத்தனர்.

இதனிடையே, டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. 2012-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 13,204 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 66 பேர் உயிரிழந்தனர் என்றும், 2013-ம் ஆண்டில் 6,122 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 2014-ம் ஆண்டில் 2,804 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 3 பேர் உயிரிழந்ததாகவும் 2015-ம் ஆண்டில் 4,535 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 12 பேர் உயிரிழந்ததாகவும் 2016-ம் ஆண்டில் 2,531 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 5 பேர் உயிரிழந்ததாகவும் 2017-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி வரை 11,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 44 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

2012-ம் ஆண்டு மலேரியாவுக்கு 18,869 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 2013-ம் ஆண்டு 15,081 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 2014-ம் ஆண்டு 8,729 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 2015-ம் ஆண்டு 5,587 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 2016-ம் ஆண்டு 4,341 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 2017-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி வரை 3,524 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

2012-ம் ஆண்டு சிக்குன் குனியாவுக்கு 514 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 2013-ம் ஆண்டு 559 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 2014-ம் ஆண்டு 543 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 2015-ம் ஆண்டு 329 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 2016-ம் ஆண்டு 86 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 2017-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி வரை 85 பேர் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012-ம் ஆண்டு ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கு 33 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 5 பேர் பலியானதாகவும் 2013-ம் ஆண்டு 33 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 2014-ம் ஆண்டு 36 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 3 பேர் உயிரிழந்ததாகவும் 2015-ம் ஆண்டு 53 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 2016-ம் ஆண்டு 51 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 2017-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி வரை 64 பேர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் லெப்டோ பைரோஸிஸ் (எலி காய்ச்சல், ஸ்கரப் டைப்ஸ், வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தவர்களின் விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close