Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகனுக்காக அரசிடம் உதவி கேட்கும் பெண் காவலர்!

கல்லீரல் சிகிச்சையளிக்க அரசிடமிருந்து உதவி தொகை பெற ஏற்பாடு செய்யுமாறு சேலம் பெண் போலீஸ் சுதா, போலீஸ் டி.ஜி.பியிடம் இன்று மனு கொடுத்துள்ளார். 

சேலம் மாநகர ஆயுதப்படையில் பணியாற்றுபவர் சுதா. இவரது மகன், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதற்கு சிகிச்சையளிக்க 17 லட்சம் ரூபாய் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தொகையில்லாததால் சுதா, மற்றவர்களிடம் உதவியை நாடியுள்ளார்.

லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுவதால், சுதா, அரசின் உதவியையும் பெற முயற்சி செய்துள்ளார். இதற்காக போலீஸ் டி.ஜி.பியிடம்  இன்று உருக்கமாக மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தன்னுடைய மகன் சிகிச்சை விவரத்தை தெரிவித்த சுதா, அரசிடமிருந்து உதவி தொகையை பெற ஏற்பாடு செய்யுமாறு தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close