Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பி.ஜே.பியுடன் சேரப்போகிறாரா கிருஷ்ணசாமி!? - 20 நிமிட சந்திப்பில் என்ன நடந்தது?

கிருஷ்ணசாமி

நேற்று கோவைக்கு வந்த பி.ஜே.பி.யின் தமிழக பொறுப்பாளாரான முரளிதர்ராவை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி  சந்தித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வை தமிழகமே ஒன்று திரண்டு எதிர்த்தபோது, நீட் தேர்வை ஆதரித்துப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் கிருஷ்ணசாமி. அரியலூர் அனிதா மரணத்துக்கு புது விளக்கம் கொடுத்து தமிழக மக்களை வேதனையில் தள்ளியவர் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. அப்போதே பி.ஜே.பி.க்கு ஆதரவாக பேசுகிறார், பி.ஜே.பி.யிடம் விலைபோய்விட்டார் என்று பல்வேறு நெகட்டிவ் விமர்சனங்கள் கிருஷ்ணசாமி மீது எழுப்பப்பட்டன. எதற்கும் சளைக்காத அவர் தன் நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்தார். பி.ஜே.பி நிர்வாகிகள் அவருக்கு தூதுவிட்டபடி இருந்தார்கள். எப்போது வேண்டுமானாலும் கிருஷ்ணசாமி பி.ஜே.பி.யுடன் இணையலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் நேற்று கோவையில் பி.ஜே.பி தலைவர்களை சந்துத்துப் பேசியுள்ளார்.

மரியாதை நிமித்தமான சந்திப்புதான் எதுவும் பேசவில்லை என்று வெளியில் சொல்லப்படுகிறது. ஆனால், 20 நிமிடங்களுக்கு மேல் நடந்த சந்திப்பில்  பி.ஜே.பி.யின் பெரும்பாலான கொள்கைகளோடு தான் ஒத்துப்போவதாக முரளிதர்ராவிடம் கிருஷ்ணசாமி தெரிவித்ததாக தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக பசுவின்மீது தேவேந்திரகுல வேளாளர் இன மக்கள் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், பி.ஜே.பி.யின் பசு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தாங்கள் நன்றி தெரிவிப்பதாகவும் கிருஷ்ணசாமி சொல்லியுள்ளாராம். நீட் பிரச்னையில்  'பி.ஜே.பி அரசின் நியாயங்களை நீங்கள் மட்டும்தான் எடுத்துச் சொன்னீர்கள்' என்று பதிலுக்கு கிருஷ்ணசாமிக்கு முரளிதரராவ் நன்றி சொல்ல... அப்போது, அருகில் நின்ற வானதி சீனிவாசன் கிருஷ்ணசாமியிடம் 'நீங்கள் கோரிக்கை வைத்ததுபோலவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி மையத்தை ஆரம்பித்துள்ளோம் டாக்டர்' என்று அதுதொடர்பான புகைப்படங்களைக் காட்டியுள்ளார். அதைப் பார்த்துவிட்டு 'ரொம்ப சந்தோஷம்மா…' என்று புன்னகை சிந்தியுள்ளார் கிருஷ்ணசாமி. இறுதியில், 'எங்ககூட சேர்ந்திடுங்களேன் டாக்டர்' என்று  தூண்டில் போட்டிருக்கிறார் முரளிதரராவ். அதற்கு கிருஷ்ணசாமி பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார் என்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close