Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோவையில் இயங்கிவரும் அரசு அச்சகத்தை மூட கடும் எதிர்ப்பு

கோவை பிரஸ் காலனியில் உள்ள மத்திய அரசின் அச்சகத்தை மூட எதிர்ப்புகள் வலுத்துவருகின்றன.

கடந்த 1964-ம் ஆண்டு, அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் மற்றும் காமராஜர் ஆகியோரது முயற்சியால், கோவை, பிரஸ்காலனியில் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின்கீழ், அரசு அச்சகம் தொடங்கப்பட்டது.

சுமார் 132 ஏக்கரில் அமைக்கப்பட்ட இந்த அச்சகத்தில், 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவந்தனர். ஆனால், அச்சகத்தில் வேலைவாய்ப்புகள் குறைந்து, தற்போது 66 நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் 45 ஒப்பந்தப் பணியாளர்களுடன் அச்சகம் இயங்குகிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் இலக்கை பூர்த்திசெய்து, ரூ.1.5 கோடி லாபம் ஈட்டிவருகிறது.

இந்நிலையில், நாட்டிலுள்ள 17 அச்சகங்களை 5 ஆகக் குறைக்க, கடந்த 21-ம் தேதி, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதன்படி, கோவை, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இயங்கிவரும் அச்சகங்கள் மூடப்பட்டு, அவற்றின் பணிகள் நாசிக்கில் உள்ள அச்சகத்தோடு இணைக்க மத்திய அமைச்சரவை முடிவுசெய்தது.

கோவை அச்சகம் மூடப்பட்டால் வேலைவாய்ப்பு, ஜாப் ஆர்டர், தென்னிந்திய முக்கியத்துவம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர். எனவே, தென்னிந்திய அச்சகங்களை மூடிவிட்டு, வட இந்திய அச்சகங்களோடு அவற்றை இணைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டுமென தொழிலாளர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

இதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். கோவை வந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், அச்சகத்தை மூடக்கூடாது என வலியுறுத்தினார். இதையடுத்து, திராவிடர் கழகம் சார்பில், அச்சகத்தை மூடக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், அச்சகத்தை மூடக்கூடாது என்று வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் சார்பிலும் வரும் சனிக்கிழமை, பெரியநாயக்கன் பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close