Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வியாபாரத்துடன்  டெங்குக்கு எதிரான தனது பங்களிப்பையும் செய்யும் மனிதர்!

தமிழகத்தை கலவரப்படுத்திவரும் டெங்குவைத் துரத்த வேண்டும் என்ற அக்கறையில், பலரும் தங்கள் பங்களிப்பைச் செய்யத் தொடங்கியுள்ளார்கள்.  

சென்னை பூந்தமல்லியில், 'மதுரை ராஜவிலாஸ்' என்ற  சிறிய  உணவகத்தை நடத்திவரும் வடக்கம்பட்டி ராமசாமி,  தன் கடைக்கு வரும்  வாடிக்கையாளர்களுக்கு, நிலவேம்புக் குடிநீரை  வழங்கத் தொடங்கியுள்ளார்.  நாட்டில் எது நடந்தால் என்ன?  நம் தொழில், நம் குடும்பம் என்று பெரும்பாலானவர்கள்  சுயநலமாக இயங்கிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில், வியாபாரத்துடன்  டெங்குக்கு எதிராகத் தனது பங்களிப்பைச் செய்துவரும்  ராமசாமியிடம் பேசினோம்,

ராமசாமி

''சமீபத்தில் சென்னையிலுள்ள சிறிய பெரிய ஹோட்டல் உரிமையாளர்களை அழைத்து சுகாதரத்துறை அமைச்சர் கூட்டம் நடத்தினார், ஹோட்டல்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவும், கொசு உற்பத்தியாகாமல் கண்காணிக்கவும், டெங்குவை விரட்டும் பணியில் ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.   டெங்கு வேகமாகப் பரவிவரும்நிலையில், எதாவது செய்யவேண்டுமென்று நினைத்தேன்.

இந்தப் பகுதியில்,  பல ஆண்டுகளாக ஹோட்டல் நடத்திவரும் நான்  வாடிக்கையாளர்களுக்கும், இப்பகுதி மக்களுக்கும் நிலவேம்பு நீரையும், விழிப்புஉணர்வையும் வழங்கிவருகிறேன். உணவுப் பாதுகாப்புத்துறை மண்டல அலுவலர் சுதாகர் மூலம்  நிலவேம்புக் குடிநீர் வினியோகத்தைத் துவக்கினேன்.  தொடர்ந்து ஒருவாரகாலத்துக்கு  இந்தச் சேவையைப்  பொதுமக்களுக்கு அளிக்கவிருக்கிறேன். அதன் பின்னும் தேவைப்பட்டால் தொடர்வேன்.  டெங்குவை விரட்ட ஒவ்வொரு கடைக்காரர்களும் களத்தில் இறங்க வேண்டுமென்பதே என் விருப்பம்'' என்றார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close