Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாகர்கோவிலில்  டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் பலி

கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், அதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறையினரும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தனர். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைத்துத் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். நாகர்கோவில் வடிவீஸ்வரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு, கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. இதனால் அவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சரிவர சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இதைத் தொடர்ந்து, கண்ணன் தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப் பட்டார். ஆனால் அவருக்கு  சிகிச்சை அளிக்க பணம் இல்லாத நிலையில், இன்று அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கண்ணன்  டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, குமரி மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் 15-க்கும் மேற்பட்டோர் டெங்கு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை கொசுமருந்து அடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close