Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம்... உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழர்கள் கொண்டாடும் முக்கியப் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் பட்டாசு வெடிப்பதால் எழும் ஒலி, தற்காலிக செவிட்டுத் தன்மையையும் தொடர் ஓசை, நிரந்தர செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்தக்கூடும். அதிக ஒலி மற்றும் ஒளியுடன் கூடிய பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசைத் தடுக்கும் வகையில் பொது நல வழக்கு  உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2005 -ம் ஆண்டு ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடிக்கத் தடைசெய்யப்பட்டுள்ளது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் தயாரிப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே தக்க விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும்  உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மேலும், இது குறித்து தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், 28.10.2015 அன்று வழங்கிய உத்தரவில், ஏற்கெனவே 2005-ல் வழங்கிய உத்தரவை சரிவர அமல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆண்டுதோறும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசு குறித்தும், விபத்தில்லா தீபாவளியைக்  கொண்டாடுவது குறித்தும் விழிப்புஉணர்வுப் பிரசாரம் மேற்கொண்டுவருகிறது. மேலும், தீபாவளிக்கு முன்தினம் மற்றும் தீபாவளி தினத்தில் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர், திருப்பூர், ஓசூர் மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் ஒலி மற்றும் காற்று மாசு அளவீடு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close