Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி நடவடிக்கை

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் தீபாவளியை முன்னிட்டு லஞ்சம் மிதமிஞ்சிப் பெறப்படுகிறது என்ற புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று அதிரடிச் சோதனையில் இறங்கினார்கள். அந்தப் பரபரப்புக்கிடையே,  லஞ்சத்தில் குளிக்கும் சார் பதிவாளர் ராஜ் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்களா என்று மக்கள் குமுறிக்கொண்டிருந்த நிலையில், இன்று கையும்களவுமாகக் கைதுசெய்யப்பட்டது, மக்களுக்கு மகிழ்ச்சியையும் மதுரை மாவட்டத்திலுள்ள பத்திரப்பதிவு ஊழியர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளிலஞ்சம்

மதுரை ஒத்தக்கடையில், ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கிவருகின்றன. இதில், சின்ன சொக்கிக்குளம் பகுதியில் சார் பதிவாளராகப் பணியாற்றிவருபவர் ராஜ். பதிவுசெய்ய வருகிறவர்கள் பணம் கொடுக்கவில்லையென்றால், இந்த அலுவலகத்தில் எதுவும் மூவ் ஆகாதாம். இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி என்பவரின் இடம் பதிவுசெய்வதற்கு, 50,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் ராஜ். அவரிடம் பேரம் பேசி, 35 ஆயிரம் தருவதாக கிருஷ்ணமூர்த்தி பேசி முடித்துள்ளார். இன்று 35 ஆயிரத்தைக் கொடுத்துவிட்டு பத்திரத்தை வாங்கிச் செல்லுமாறு ராஜ் தெரிவித்துள்ளார். இதை லஞ்சஒழிப்பு போலீஸிடம் கிருஷ்ணமூர்த்தி புகாராகக் கொடுத்ததைத் தொடர்ந்து, ரசாயனம் தடவிய நோட்டுகளைக் கொடுத்து கிருஷ்ணமூர்த்தியை அனுப்பிவைத்தனர். அதை, சார் பதிவாளர் ராஜிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் ராஜை  கைதுசெய்தனர். பணம் அதிகம் புழங்கும் அரசு அலுவலகங்களில், இந்த வாரம் முழுக்க அதிரடி நடவடிக்கைகள் இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close