Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாஸ்மாக் மதுபானம் விலை உயர்வு - நாளை முதல் அமல்?

டாஸ்மாக்


‘டாஸ்மாக்’ மதுபானங்களின் விலை உயர்வுக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், நாளை (13-ம் தேதி) முதல் அது அமலுக்கு வரவிருப்பதாகவும் டாஸ்மாக் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதில், ‘டாஸ்மாக்’ நிறுவனம் முதலிடம் வகிக்கிறது. டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 25 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியின்போது சொல்லியிருந்த ஜெயலலிதா, அதன்பின் மீண்டும் தமிழக முதல்வராய் ஆட்சியில் அமர்ந்தபோது 1,000 ‘டாஸ்மாக்’ கடைகள் மூடப்பட்டன. நேரமும் குறைக்கப்பட்டது. எனினும், ‘டாஸ்மாக்’ விற்பனை தொடர்ந்து உச்சத்தில் இருந்துவருகிறது. தமிழகத்தில் தற்போது 5,500–க்கும் மேற்பட்ட ‘டாஸ்மாக்’ கடைகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் மூடப்பட்டிருந்த சில கடைகள்கூட தற்போது மீண்டும் திறப்புவிழா கண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு அதன் வருமானம் அமோகமாய் இருக்கிறது. இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், ‘டாஸ்மாக்’ மதுபான விலையை உயர்த்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதுகுறித்து ‘டாஸ்மாக்’ வட்டார அதிகாரிகள், ''தமிழக அமைச்சரவை ‘டாஸ்மாக்’ மதுபான வகைகளின் விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, குவார்ட்டர் அளவு கொண்ட ரம், விஸ்கி, பிராந்தி, ஓட்கா போன்ற மதுவகைகள் விலை ரூ.10 முதல் ரூ.12 வரை அதிகரிக்க உள்ளது. ‘ஆப்’ அளவுகொண்ட மது வகைகள் ரூ.20 வரையிலும் ‘புல்’ அளவுகொண்ட மது வகைகள் ரூ.40 வரையிலும் விலை அதிகரிக்கும். பீர் விலையைப் பொறுத்தவரை மாற்றம் இல்லை. பழைய விலையிலேயே பீர் விற்பனை செய்யப்படும். அதேபோன்று ‘எலைட்’ மதுபான வகைகளின் விலையும் உயர்த்தப்படவில்லை. மதுபானங்கள் மீதான இந்த விலை உயர்வு 13–ம் தேதி (நாளை) முதல் அமலுக்கு வருகிறது. இதன்மூலம், ஆண்டுக்கு 2,600 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும். கடந்த 2014–ம் ஆண்டு நவம்பர் 1–ம் தேதி, டாஸ்மாக் மதுபானங்களின் விலை குவார்ட்டருக்கு ரூ.8 உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் தற்போது விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close