Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வண்டலூர் வனவியல் பூங்காவில் சிங்கக்குட்டிக்கு பெயர் வைக்கிறார் முதல்வர்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அடிக்கடி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்வார். அப்போது, விலங்குகளின் மிக அருகே சென்று ரசிப்பார். அங்குள்ள புலிக்குட்டிகளுக்குப் பெயர் வைப்பது முதல், விலங்குகளுக்கு உணவு அளிப்பது, அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவார். அந்த வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இன்று சிங்கக்குட்டிகளுக்குப் பெயர் வைப்பதற்கும், விலங்குகள் ஆராய்ச்சி மையம் தொடங்குவதற்காகவும் வண்டலூர் செல்கிறார்.

edappadi palanisamy

வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ளது விலங்குகள் மீட்பு மையம். அந்தப் பகுதியில் புதிதாகத் தொடங்கப்பட்ட விலங்குகள் ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கிவைக்க இருக்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பிறகு, அதிகாரிகளுடன் கூட்டம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, சிங்கக்குட்டிக்கு பெயர் வைத்து, பூங்காவைச் சுற்றிப்பார்க்க இருக்கிறார். வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது, வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்திருந்த எடப்பாடி பழனிசாமியிடம்,  அங்குள்ள தொழிலாளிகள், தற்காலிகப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; பதவி உயர்வும், சம்பளமும் உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை திண்டுக்கல் சீனுவாசனிடம் கொடுத்தார். நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் எடப்பாடி உறுதியளித்தார். ஆனால், அந்த மனுமீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தீபாவளிப் பரிசாக இதையெல்லாம் முதல்வர் செய்ய வேண்டும் என்பது உயிரியல் பூங்கா ஊழியர்களின் எதிர்பார்ப்பு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close