Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆதரவாளர்கள் வழியனுப்பிவைக்க...  சிறைக்குப் புறப்பட்டார் சசிகலா!

ஐந்து நாள் பரோல் முடிவடைந்த நிலையில், சென்னை தி.நகரிலிருந்து கார் மூலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குப் புறப்பட்டார் சசிகலா.

சசிகலா
 

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா விதித்த நான்கு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதத்தை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. அதே நேரத்தில், ஜெயலலிதா இறந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடராசன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்லீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட அவருக்கு, கடந்த 4-ம் தேதி உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், நடராசனைப் பார்க்க 15 நாள் பரோல் கேட்டு கர்நாடக சிறைத்துறையிடம் சசிகலா விண்ணப்பித்திருந்தார். தீவிர பரிசீலனைக்குப் பின்னர், சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை  ஐந்து நாள் மட்டுமே பரோல் வழங்கியது. கடந்த 6-ம் தேதி,  பெங்களூரிலிருந்து சென்னை வந்த சசிகலா, தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கினார். மருத்துவமனைக்குச் சென்று நடராசனைப் பார்த்துவந்தார்.

பரோல் முடிவடைந்த நிலையில், இன்று காலை சென்னை தி.நகரில் இல்லத்திலிருந்து சசிகலா புறப்பட்டார். சசிகலாவைப் பார்க்க அவரது ஆதரவாளர்கள் தி.நகர் இல்லத்தில் குவிந்தனர். தங்க.தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், கதிர்காமு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் சசிகலாவைச் சந்தித்துப் பேசினர். பின்னர், கார் மூலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குப் புறப்பட்டார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close