Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

களத்தில் இறங்கி குப்பையை அகற்றிய மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

சென்னை கொளத்தூர் தொகுதியில், சாலையோரங்களில் கிடந்த குப்பைகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அகற்றினார். "இந்த டெங்கு ஆட்சி ஒழிய வேண்டும்" என்று ஆவேசமாகச் செய்தியாளர்களிடம் கூறினார்.

தமிழகத்தில், சாலையோரங்களில் குப்பைகளைக் கொட்டுவது அதிகரித்துவருகிறது. இதனால் நோய்கள் வேகமாகப் பரவுகின்றன. ஏடிஸ் என்ற கொசுவால் டெங்கு காய்ச்சல் தப்போது தமிழகத்தில் வேகமாகப் பரவிவருகிறது. 400-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள தமிழக அரசு, டெங்கு காய்ச்சலுக்கு கடந்த 9-ம் தேதி வரை 40 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று சாலையோரங்களில் கிடந்த குப்பைகளை அகற்றினார். குவியலாகச் சேர்க்கப்பட்ட குப்பைகள், பின்னர் ஜேசிபி மூலம் வாகனங்களில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தி.மு.க-வினர் குப்பைகளை அகற்றிவருகின்றனர். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "டெங்கு பரவல் தடுப்புப் பணிகளில் தி.மு.க-வினரும் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன். இந்தக் கொடுமைகளுக்கு முக்கியக் காரணம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறாமல் இருப்பதுதான். உள்ளாட்சித் தேர்தல் நடந்திருந்தால், ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருந்திருப்பார்கள். அவர்கள் இருக்கும்போது, சுகாதார சீர்கெடுகளைக் களையும் பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.

டெங்கு காய்ச்சலும் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், இந்த ஆட்சி குதிரை பேர ஆட்சியாக நடந்துகொண்டிருக்கிறது. மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத நிலையில் குழப்பதிலே அவர்கள் இருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென்று உயர் நீதிமன்றமே உத்தரவு போட்டிருக்கிறது. அந்தத் தீர்ப்பைக்கூட மதிக்காமல், அதை எப்படி தள்ளிப்போடுவது என்பதில்தான் அவர்கள் முயலுகிறார்கள். இதனால், டெங்கு எந்த அளவுக்குப் பரவியிருக்கிறது. இந்த டெங்கு ஒழிய வேண்டுமென்று சொன்னால், எடப்பாடி தலைமையில் இருக்கும் இந்த டெங்கு ஆட்சி ஒழிய வேண்டும். இந்த ஆட்சி ஒழிந்தால்தான் டெங்கு ஒழியும்" என்றார்.

பின்னர் செய்தியாளர்கள், டெங்கு உயிரிழப்பு குறித்து முதலமைச்சரும் அமைச்சரும் முரண்பட்ட கருத்து தெரிவித்திருக்கிறார்களே என்று கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் அளித்த மு.க.ஸ்டாலின், நீங்களே சொல்லிவிட்டீர்கள். இந்த அரசே முரண்பட்ட அரசுதான். டெங்குவைக் கட்டுப்படுத்த வேண்டும். உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து.

டெங்கு உயிரிழப்புகுறித்து ஆதாரத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் கூற வேண்டும் என்று அமைச்சர் சரோஜா கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, ``ஒவ்வொரு அரசு மருத்துவமனைக்கும் ஒவ்வோர் ஊருக்கும் வரச்சொல்லுங்கள். வந்து பார்க்கச் சொல்லுங்கள். அப்போது, ஆதாரத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்'' என்றார் மு.க.ஸ்டாலின்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close