Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரத்ததானம் செய்த புதுச்சேரி தி.மு.க-வினர்!

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, புதுச்சேரி தி.மு.க-வை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ரத்ததானம் செய்துள்ளனர்.

புதுச்சேரி

தமிழகத்தைத் தொடர்ந்து, புதுச்சேரியில்டெங்கு காய்ச்சல் அதிவேகமாகப் பரவிவருகிறது. இதுவரை, புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் இயங்கும் ஜிப்மர் மற்றும் அரசு மருத்துவமனைகளில், புதுவை மக்களைவிட தமிழக மக்களே அதிக அளவில் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சைபெற்றுவருகின்றனர். நாளுக்கு நாள் டெங்குவின் தாக்கம் அதிகரித்து வருவதால், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் முதல்வர் நாராயணசாமியும் பொதுமக்களுக்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு, டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆளுநர் மாளிகையில் ரத்ததான முகாமை நடத்திய கவர்னர் கிரண்பேடி, “டெங்குக் காய்ச்சலுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருபவர்களுக்கு, அதிக ரத்தம் தேவைப்படுகிறது. அதனால், ரத்ததானம் அளிக்க தன்னார்வலர்கள் தாராளமாக முன்வர வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

 

அதேபோல, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, தி.மு.க-வின் தொண்டர்களும் நிர்வாகிகளும் ரத்ததானம் செய்ய வேண்டும் என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதையடுத்து புதுச்சேரி தெற்குப் பகுதி தி.மு.க சார்பில் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. புதுச்சேரியின் தெற்கு மாவட்ட தி.மு.க அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற முகாமில், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். மேலும், இன்று முதல் தொடர்ந்து ஒரு மாத காலத்துக்கு தி.மு.க-வினர் ரத்ததானம் செய்ய உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close