Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமைச்சர் ஜெயக்குமார் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு: சீர்காழி இளைஞர் கைது

அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு பரப்பியதாக, சீர்காழியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 


சமூக வலைதளங்களில் அமைச்சர் ஜெயக்குமாரின் புகைப்படங்கள் தவறாகச் சித்திரிக்கப்பட்டு பரப்பப்படுவதாகவும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், அவரது ஆதரவாளர்கள் புகார் அளித்திருந்தனர். அந்தக் குறிப்பிட்ட புகைப்படம் பகிரப்பட்ட ஐ.பி. முகவரி (IP Address) குறித்து விசாரணை நடத்திய சென்னை சைபர் கிரைம் போலீஸார், அது சீர்காழியிலிருந்து பகிரப்பட்டதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, சீர்காழிக்கு விரைந்த தனிப்படை போலீஸார், சதீஷ்குமார் என்ற 28 வயது இளைஞரைக் கைதுசெய்தனர். 

விசாரணையில், அவர் பிரவுசிங் சென்டர் நடத்தி வருவதாகவும், மேலும், சில தமிழக அமைச்சர்கள்குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் புகைப்படங்களைப் பகிர்ந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, அவர்மீது உள்நோக்கத்துடன் திட்டமிட்டு வதந்தி பரப்புதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவுசெய்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்த உள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close