Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

13 மாவட்ட ஆட்சியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Chennai: 

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரிய வழக்கில் இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத 13 மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, இன்று 13 மாவட்ட ஆட்சியர்களும் நீதிமன்றத்துக்கு வருகை தந்தனர். 

சென்னை உயர் நீதிமன்றம்

ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டது. ஆனால், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை எனக் கூறி இயற்கை வளம் மற்றும்  பெரும்பள்ள ஓடை பாதுகாப்புச் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றாத 13 மாவட்ட ஆட்சியர்களும் நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, இன்று விழுப்புரம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, நாகை, தஞ்சை, தருமபுரி, நீலகிரி, கரூர் மற்றும் திருவாரூர் ஆகிய 13 மாவட்ட ஆட்சியர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close