Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லாரி ஓட்டுநரின் உயிரைப்பறித்த மின்சாரம்! அமைச்சர்கள் வந்த வழியில் விபத்து

தூத்துக்குடி – மதுரை பைபாஸ் சாலையில் லாரி மீது மின்சாரம் பாயந்ததில் லாரி ஓட்டுநர் உடல்கருகி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

lorry driver death

திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் லூர்துசாமி. லாரி ஓட்டுநரான இவர், தூத்துக்குடி துறைமுகத்துக்கு ஏற்றுமதிக்கான சரக்குகளை கண்டெய்னர் பெட்டியில் ஏற்றிக்கொண்டு இன்று காலையில் தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி - துறைமுக பைபாஸ் சாலையின் ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக இறங்கியுள்ளார். அப்போது, திடீரென கண்டெய்னர் பெட்டி உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதில் லாரியின் டயர் தீப்பிடித்து எரிந்தது.

இதை அறியாமல் தீயை அணைக்க முற்பட்டு லாரியைத் தொட்ட டிரைவர் லூர்துசாமி, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே கருகினார். இச்சம்பவம் அறிந்த அருகிலுள்ள மற்ற லாரி ஓட்டுநர்கள் தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளிக்கவே விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இதுகுறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் லாரி ஓட்டுநர்கள், பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

minister visit lorry driver death spot

திருச்செந்தூரில் இன்று நடைபெறவுள்ள கந்தசஷ்டி திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் அதிகாரிகளுடனான கூட்டத்தில் கலந்துகொள்ள அவ்வழியே வந்த செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வுசெய்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close