Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதிப்பெண்களில் பாகுபாடு: பள்ளிக்கல்வித்துறை செயலர் பதில் அளிக்க உத்தரவு!

சென்னை  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மதுரையைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் , 2017-18-ம் கல்வி ஆண்டு முதல் 11-ம் வகுப்புத் தேர்வும் பொதுத்தேர்வாக நடத்தப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசாணை எண் 50-ன் படி மொழிப்பாடம் மற்றும் செய்முறைத்தேர்வுகள் அல்லாத பாடங்களில் 10 மதிப்பெண்கள் அகமதிப்பீட்டு மதிப்பெண்களாகவும், 90 மதிப்பெண்கள் தேர்வு அடிப்படையிலும் வழங்கப்படும். 90 மதிப்பெண்களில் தேர்ச்சி பெற 25 மதிப்பெண்களை பெற வேண்டும். செய்முறைத் தேர்வு கொண்ட பாடங்களில் 70 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும். தேர்ச்சி மதிப்பெண்ணாக 15 மதிப்பெண்களைப் பெற வேண்டும். செய்முறைத் தேர்வுகளைக் கட்டாயம் செய்ய வேண்டும். செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வுகளை சேர்த்து மொத்தம் 35 மதிப்பெண்கள் தேர்ச்சி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அகமதிப்பீட்டு முறையைப் பொறுத்தவரை, செய்முறை தேர்வற்ற மாணவர்களுக்கு 10 மதிப்பெண்ணும், தொழில் பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு 25 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. இதுபோல மதிப்பெண்கள் வழங்குவதிலும், தேர்ச்சி மதிப்பெண்களை நிர்ணயிப்பதிலும் பாகுபாடு காட்டுவது சட்ட விரோதமானது. ஆகவே, மதிப்பெண் வழங்குவதில் பாகுபாடு காட்டும் அரசாணை எண் 50ஐ ரத்துசெய்ய வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறையின் செயலர், இயக்குநர் பதில்மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close