Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சசிக்குமார் கொலை வழக்கில் கைதான சுபேருக்கு நீதிமன்றக் காவல்!

இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் கைதான சுபேரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் கடந்தாண்டு செப்டம்பர் 22-ம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுப்பிரமணியபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, தேடப்பட்டக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட சதாம் உசேன் மற்றும் முபாரக் ஆகிய இருவரைப் பற்றியும் துப்பு கொடுத்தால் பரிசு தரப்படும் எனத் தென்னிந்தியா முழுவதும் காவல்துறை விளம்பரப்படுத்தியது. சதாம் உசேன் மற்றும் அபுதாகீரை சிறப்பு புலனாய்வுப் படையினர் கைதுசெய்தனர். அபுதாகீர் நிபந்தனை ஜாமீனில் இருக்கிறார். சதாம் உசேன் கைதுசெய்யப்பட்டபோது தலைமறைவான கோவை உக்கடம் கோட்டைப்புதூர் பகுதியைச்சேர்ந்த சுலைமானின் மகன் சுபேரைக் காணவில்லை. அவரை சிறப்பு புலனாய்வுப் படையினர் தேடி வந்தனர். 

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவுப் பணி முடிந்து ஒலவக்கோட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பும்போது பொள்ளாச்சி கோவில்பாளையம் அருகே உள்ள முள்ளுப்பாடி கேட்டில் வைத்து சிறப்பு புலனாய்வுப் படையினர் சுபேரைப் பிடித்து, விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். சுபேர் பாலக்காடு மாவட்டத்திலுள்ள ஒலவக்கோடு அருகேயுள்ள அப்ஹோல்சரி கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரை விசாரித்தபின் கைதுசெய்த சிறப்புப் புலனாய்வுப் படையினர் இன்று தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மதுரசேகர் முன்பு ஆஜர்படுத்தினர். சுபேரை வருகின்ற 26-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டார். இதையடுத்து சி.பி.ஐ.டி.யின் சிறப்பு தனிப்படையினர் சுபேரை காவலில் எடுத்து விசாரிக்க மனு அளித்தனர். அதன் மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது. அவர் பலத்த பாதுகாப்போடு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close