Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் அண்ணன் விபத்தில் மரணம்!

சிவகங்கை மாவட்டம், சோழபுரம் அருகே ஒக்கூர் அண்ணா நகர் வழியாக மானாமதுரை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், இன்று காலை 5.45 மணி அளவில், கார் ஸ்டேரிங்கில் ஏற்பட்ட பழுதால், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த,  அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் மூத்த சகோதரர் சேவபாண்டியன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியனார். ராமநாதபுரத்தில் வசித்து வந்த இவர், தனது தொழில் நண்பரான பரமக்குடியைச் சேர்ந்த மணி என்பவருடன், திருச்சி விமான நிலையம் சென்றபோது, இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தகவல் அறிந்து வந்த சிவகங்கை நகர் காவல் துறையினர் சேவபாண்டியனின் உடலைக் கைப்பற்றி,  உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். கார் ஓட்டுநர் பாஸ்கரன் மற்றும் அவரது நண்பர் மணி லேசான காயங்களுடன் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கையில் டெங்கு மரணத்தைவிட கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் விபத்தில் மரணமடைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close