Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தப்படும்: தேர்தல் ஆணையம் தகவல்

டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி தெரிவித்துள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையர் ஜோதி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருக்கிறது. இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, பணப்பட்டுவாடா புகாரில் ரத்துசெய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஓர் ஆண்டாகக் காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஜோதி தெரிவித்துள்ளார். வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்த புகாரின் பேரில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னர், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது நடக்கும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பையும் ஜோதி வெளியிட்டார். அதன்படி, 'இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும். தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ம் தேதி நடைபெறும். குஜராத் மாநிலத்தில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்த அறிவிப்பு வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படும். அதே நேரத்தில், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகளும் டிசம்பர் 18-ம் தேதிக்குள் எண்ணப்படும்' என்று ஜோதி கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close