Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாகர்கோவிலில் வேலைவாய்ப்பு முகாம்..! இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், கிராம நலன் தூய்மைக்கான இரு வார இயக்கம் 1.10.17 முதல் 15.10.17 வரை நடைபெறுகிறது. இதில் படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை பெற்றுத்தரும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் 14-ம் தேதி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரியில் காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது.

முகாமில் உள்ளூர் மற்றும் சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் இருந்து பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளனர். முகாமில் அகத்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம், தக்கலை, குருந்தன்கோடு, திருவட்டார், கிள்ளியூ,ர் முன்சிறை, மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேரூராட்சிகள் மற்றும் நாகர்கோவில் நகராட்சி பகுதிகளைச் சார்ந்த 8-ம் வகுப்பு முதல் தொழில் பயிற்சி பட்டப்படிப்பு, டிப்ளோமா இன் பார்மசி நர்சிங் அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை கலை அறிவியல் மற்றும் பொறியியல் வரை படித்த 40 வயதுக்குட்பட்ட ஆண் பெண் இருபாலரும் தங்கள் கல்விச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்களுடன் கலந்துகொண்டு இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு  மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான் தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close